சென்னை: சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வலுவிழந்த டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்கிறது.
