எல்லாமே தப்பு தப்பா பண்றாங்க… இந்தியாவின் ஜிடிபி ‘சி கிரேடு’ கணக்கீடு: சர்வதேச நாணய நிதியம் அதிரடி

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.2% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்த ஜிடிபி கணக்கீட்டை சி கிரேடு அறிக்கை என்று தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) இதுதொடர்பாக கூறும்போது,’ இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் புள்ளிவிவரங்களின் தரம் இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியாவின் தேசியக் கணக்கு விவரங்களின் தரத்திற்கு ‘சி’ கிரேடு (இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பீடு) அடிப்படையில் உள்ளது.

இந்தியாவின் ஜிடிபி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு நடைமுறையானது, இன்னும் 2011-12 என்ற பழைய முறைப்படியே உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைப்புசாராத் தொழில்களின் பங்களிப்பு ஆகியவை சரியாகக் கணக்கிடப்படவில்லை. உற்பத்தித் துறையில் ஆராய்ச்சிக்கான செலவு மிகவும் குறைவாக உள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் மனித வள மேம்பாட்டில் அதிக முதலீடு செய்து, தற்போதைய குறைகளைச் சரிசெய்தால் மட்டுமே, இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: