வேலை வாங்கி தருவதாக மோசடி: அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதி உதவியாளர் மீது வழக்கு

திருச்சி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதராக வேலை செய்வதாக கூறி அறிமுகமானார். பின்னர் ரயில்வே மற்றும் காவல்துறையில் கோபிநாத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய கோபிநாத், கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த, அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதியிடம் உதவியாளராக வேலை செய்து வந்த சுகந்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். இதை பெற்று கொண்ட இருவரும் கோபிநாத்துக்கு வேலை வாங்கி தரவில்லை.

பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கோபிநாத் கேட்டும் காலம் கடத்தி வந்தனர். இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின்பேரில் சுகந்தி, மோகன்ராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: