தனிம காந்தங்கள் உற்பத்தி: ரூ.7,280 கோடியில் புதிய திட்டம்

புதுடெல்லி: ஆட்டோமொபைல், வீட்டு உபயோக மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள், மருத்துவ இயந்திரங்கள், விமானங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றில் அரிய வகை தனிமங்களால் தயாரிக்கப்படும் நிரந்தர காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓராண்டுக்கு இந்தியாவுக்கு சுமார் 5000 மெட்ரிக் டன் அரிய வகை தனிம நிரந்தர காந்தங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு முழுமையாக சீனாவை நம்பி உள்ளது. எனவே, இந்தியாவிலேயே ரூ.7,280 கோடியில் அவற்றை தயாரிப்பதற்கான புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 ரயில் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,781 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் தேவ்பூமி துவாராகாவில் (ஓகா) இருந்து கனாலஸ் வரை 141 கிமீக்கு இரட்டை வழிப்பாதையும், பத்லாபூரில் இருந்து கர்ஜத் வரை 32 கிமீக்கு 3வது மற்றும் 4வது வழித்தடமும் அமைக்கப்படும். இதுமட்டுமின்றி புனேவில் மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தை ரூ.9,858 கோடியில் விரிவாக்கம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: