விவசாயிகள், தொழிலாளர்களை சுரண்டும் ஒன்றிய பாஜக அரசு: கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை முற்றிலும் புறக்கணித்து அவர்களை சுரண்டுவதிலும், கொள்ளையடிப்பதிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்திகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசு நாட்டின் பொருளாதாரக் கொள்ளைகளைச் சிதைத்துள்ளதாகவும், அதன் நேரடி விளைவுகளை 140 கோடி இந்தியர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இன்று முதல், பல அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்றும், வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலைகள் விண்ணை முடுக்கின்றன கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், 900க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, சிகிச்சை செலுவுகள் அதிகரித்துள்ளதாக கார்கே புகார் கூறியுள்ளார். மேலும் அதிக சுங்கவரி செலுத்தவேண்டி இருக்கும் என்றும் நெடுஞ்சாலை கொள்ளை தொடர்கிறது என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்பீட் போஸ்ட் கட்டணங்களும் 34%சதவீதம் அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள், நமது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சலுகைக்காக காத்திருக்கும் வேளையில் பாஜக தலைமை அவர்களை முற்றிலுமாக புறக்கணித்து பொதுமக்கள் சுரண்டுவதிலும் பேரிடரை பயன்படுத்தி கொள்ளையடிப்பதிலும் கவனம் செலுத்திகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

Related Stories: