திருமணம் குறித்த பதிவுகளை இன்ஸ்டாகிராமில் நீக்கிய மந்தனா: கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின், ஸ்மிருதி மந்தனா திருமணம் செய்யவுள்ள, பலாஷ் முச்சாலுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சங்லி நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனார். இதற்கிடையே, தனது திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஸ்மிருதி மந்தனா நீக்கியுள்ளார்.

இது, மந்தனாவின் ரசிகர்கள் மத்தியில் பரவலாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்கிடையே, பலாஷ் முச்சால், வேறு ஒரு பெண்ணுடன் சமூக வலைதளத்தில் சாட்டிங்கில் ஈடுபட்டதாக கூறி வெளியான ஒரு பதிவும், பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், பலாஷ் முச்சாலின் சகோதரி பலாக் முச்சால், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்ட பதிவில், ‘ஸ்மிருதி மந்தனாவின் தந்தையின் உடல் நலன் கருதி, மந்தனா – பலாஷ் இடையிலான திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இரு குடும்பங்களின் தனிமை சுதந்திரத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: