எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் பின் வாங்கியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு பின் வாங்கியுள்ளது. 1966ல் பஞ்சாபில் இருந்து ஹரியானா பிரிந்தபோது இரு மாநிலங்களின் பொது தலைநகராக சண்டிகர் உள்ளது. தலைநகர் பிரச்சனையால் சண்டிகர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு சுதந்திரமான தலைமைச் செயலர் மூலம் 1984ல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் சண்டிகர் கொண்டு வரப்பட்டது.

மசோதா மூலம் பஞ்சாபிடம் இருந்து சண்டிகரை பறிக்க முயற்சிப்பதாக ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சண்டிகரில் குடியரசுத் தலைவர் நேரடியாக சட்டமியற்ற அதிகாரமளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அந்த வகையில், குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தை கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

Related Stories: