எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளை கண்காணிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு பார்வையாளர்கள் குழுவை தேர்தல ஆணையம் நியமித்துள்ளது. இந்த சிறப்பு பார்வையாளர்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் வரை வாரத்திற்கு இரண்டு முறை தமிழ்நாடு உள்ளிட்ட இந்த மாநிலங்களில் தங்கி இருந்து எஸ் ஐ ஆர் பணிகளை மேற்பார்வையிடுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறப்பு பார்வையாளர்கள் மாவட்ட மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி எஸ் ஐ ஆர் நடவடிக்கை சுமூகமாக நடைபெற்று முடிவதை உறுதி செய்வார்கள் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: