திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

திருவனந்தபுரம்: 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்திலுள்ள நிஷாகந்தி அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட விழாவை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் தொடங்கி வைத்தார். விழாவுக்கு கேரள சினிமா அகாடமி துணை தலைவர் குக்கு பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். சிலி நாட்டு இயக்குனர் பாப்லோ லாரோ இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாலஸ்தீன நாட்டு தூதர் அப்துல்லா எம். அபு ஷவேஷ், ஜெர்மன் நாட்டு தூதர் பிலிப் அக்கர்மேன், பிரபல மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் ஸ்பிரிட் ஆப் சினிமா விருது கனடா நாட்டு பெண் இயக்குனரான கெல்லி ஃபைஃப் மார்ஷலுக்கு அமைச்சர் சஜி செரியான் வழங்கினார். தொடக்க விழாவுக்கு பின்னர் ஆன் மேரி ஜாசிர் இயக்கிய ‘பாலஸ்தீன் 36’ என்ற படம் திரையிடப்பட்டது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் துருக்கி, வியட்நாம், பாலஸ்தீன், கொரியா, ஸ்பெயின் உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 படங்கள் 26 பிரிவுகளில் திரையிடப்படுகின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள 16 தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.

Related Stories: