புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் தளவாட சவால்கள் மற்றும் சிறப்பு தேவைகளை கவனத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப படிவத்தில் அவர்களது விருப்பமான தேர்வு மையமாக குறிப்பிடும் தேர்வு மையத்தையே ஒதுக்கப்படும். இது மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
