திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சமூக ஊடக பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
சமூக ஊடகத்தில் நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும். சமூக சீர்கேடுகளை களைவதுதான் நம்முடைய நோக்கம். ஏட்டிக்கு போட்டியாக திட்டி அவர்களைவிட நாம் மட்டமானவர்கள் என நாமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகக்கூடாது. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.
