அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வால்வோ பேருந்து கட்டண விவரம் வெளியீடு!!

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வால்வோ பேருந்து கட்டண விவரம் வெளியிடப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு மல்டி ஆக்சில் பேருந்து பயணக் கட்டணம் ரூ.565 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை- நெல்லை ரூ.1,080, சென்னை – மதுரை ரூ.790, சென்னை – திருச்செந்தூருக்கு ரூ.1,115ஆக கட்டணம். சென்னை – சேலம் ரூ.575, சென்னை – திருப்பூர் ரூ.800, சென்னை – பெங்களூருவுக்கு ரூ.735ஆக கட்டணம். கோவை – சென்னை ரூ.880, கோவை – பெங்களூரு ரூ.770, நாகர்கோவில் – சென்னைக்கு ரூ.1,215ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: