ஒன்றிய அரசு தரும் மானியத்தை வருமானமாக கருத இயலாது: ஐகோர்ட்

மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு தந்த மானியத்தை வருமானமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய கடன்களை திருப்பி செலுத்த ஒன்றிய அரசு மானியம் வழங்கியது. கடன்களை திருப்பிச் செலுத்த ஏதுவாக 2007-2008ம் ஆண்டு ஒன்றிய அரசு ரூ.3.50 கோடி மானியமாக வழங்கியது. ரூ.3.5 கோடியை கூட்டுறவு ஒன்றியத்தின் வருமானமாக கணக்கில் எடுத்து, வருமானவரித் துறை ஆணையிட்டது.வருமானவரி துறை உத்தரவை எதிர்த்து தருமபுரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.

Related Stories: