சென்னை: அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்பு, பொறுமை, கருணைக்கு அடையாளமாக திகழும் இயேசுநாதர் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வோம். கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமைகள், வளர்ச்சிக்காக திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக நமது அரசு உள்ளது. சிறுபான்மை மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் என்றுமே திமுக இருக்கும். எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே திராவிட மாடல் ஆட்சி தொடரும். சிறுபான்மை மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கும் என தெரிவித்தார்.
