சபரிமலை தங்கம் திருட்டு: முன்னாள் தேவசம்போர்டு தலைவரிடம் விசாரணை

கேரளா: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இருவருக்கும் இடையில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டிய பிறகு பத்மகுமாரை கைதுசெய்ய திட்டமிட்டுள்ளது.

Related Stories: