துர்நாற்றத்தால் மக்கள் அவதி திருச்சி செயின், செல்போன் பறிப்பு சம்பவங்களை தடுக்க 10 குற்ற தடுப்பு நடவடிக்கை குழு அமைப்பு

திருச்சி, ஜன.6: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் தற்போது மீண்டும் பழையமுறைபடி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது. ஆனாலும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.இதில் ஏற்கனவே மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற லோகநாதன், மாநகர காவலர்களுக்காக ‘தினம் ஒரு தகவல்’ திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

தற்போது, மாநகரில் நடக்கும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக ஆன்ட்டி ஸ்னாச்சிங் டீம் (Anti Snaching Team) என்ற ஸ்பெஷல் டீமை மாநகர கமிஷனர் லோகநாதன், துவக்கி உள்ளார். பொன்மலை உதவி கமிஷனர் முத்தமிழ்செல்வம் தலைமையில் 10 குழுக்கள் துவங்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இந்த ஸ்பெஷல் குழுக்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: