விஞ்ஞானிகள் ஆய்வு சட்டமன்ற தேர்தல் பணியில் 55 வயதுக்கு மேற்பட்டோர், நோய் பாதிப்புள்ளோரை ஈடுபடுத்த கூடாது

மன்னார்குடி, ஜன.5: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் மனுவில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதை போல் அதனை எதிர்காலத்தில் 15 சதவீதமாக உயர்த்தி அதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். எதிர்வரும் சூழ்நிலை தொழில்நுட்பத்திற்கேற்ப மாணவர்கள் நலன்கருதி 6ம் வகுப்பு முதல் லேப்டாப் வழங்க வேண்டும். மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் பணிக்கு தற்போது ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது. அதில் 55 வயதிற்கு மேற்பட்டோர், இதயநோய், புற்றுநோய், சிறுநீரக்கோளாறு, கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோரை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கும் பொருட்டு விவரம் சேகரிக்கும் போதே விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணி நியமனம் 40 வயது வரம்பு அரசாணை திரும்ப பெற்று பழைய முறையே தொடர வேண்டும். ஆசிரியர்கள் உயர்படிப்பு ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும். பொதுத்தேர்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை எவையென அறிவித்திட வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மத்திய அரசுபோல் அனைத்து நோய்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கவும். ஆசிரியர் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர் மீதுள்ள நடவடிக்கையினை ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: