திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்

காரியாபட்டி, ஜன.5: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் ஆவியூர் கிராமத்தை சேர்ந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலையில் திமுக.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஆவியூர் கிளை செயலாளர் மணிகண்டன், கணபதி, மணிவண்ணன், அம்மையப்பன், இளைஞரணி சிலம்பரசன், தகவல் தொழில்நுட்ப அணி காராளமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: