வாழப்பாடி, அக்.31: அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், மேட்டுப்பட்டி தாதனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் தாசில்தார் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குணலட்சுமி, அயோத்தியாப்பட்டணம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் (எ) சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அவை தலைவர் கவுதமன், ஒன்றிய பொருளாளர் பழனிவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில், ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி அகரம் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். ெமாத்தம் 484 மனுக்கள் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
- ஸ்டாலின்
- வஜப்பாடி
- மேட்டுப்பட்டி தாதனூர்
- அயோத்தியாபட்டணம் ஒன்றியம்
- சேலம் தாசில்தார் பார்த்தசாரதி
- வட்டார வளர்ச்சி அலுவலர்
- குணலட்சுமி
- அயோத்தியபட்டினம்
- டிஎம்கே வடக்கு ஒன்றியம்
- இரத்தினவேல்
- தலைமை செயற்குழு
