ஓமலூர், அக்.29: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 22 விவசாயிகள் 115 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், மொத்தம் 4,598 கிலோ கொப்பரையை 5 வியாபாரிகள் ரூ.8.92 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். ஏலத்தில் கொப்பரை அதிகபட்சம் கிலோ ரூ.217.89க்கும், குறைந்த பட்சம் ரூ..60.99க்கும், சராசரி ரூ.213.25க்கும் விலை போனது. அதேபோல், ஆமணக்கு 23 கிலோ ஏலத்திற்கு வந்தது. இது கிலோ ரூ.65 வீதம் ரூ.1495-க்கு வியாபாரி வாங்கினார். அதேபோல 4 மூட்டைகளில் 231 கிலோ கொள்ளு ரூ.6930-க்கு ஏலம் போனது. இதில், அதிகபட்சம் கிலோ ரூ.30க்கு விற்பனையானது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விலை பொருட்களுக்கு, இருப்பு கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு, ஒழுங்குமுறை விற்பனை கூட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.
