அமைச்சர் உதயகுமார் பேச்சு

திருமங்கலம், டிச. 31:  மதுரை திருமங்கலத்தில் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது. டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: அம்மா சேரிடபிள் டிரஸ்டில் ஆரம்பத்தில் நூறு ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். திருமங்கலம் தொகுதியில் வளரும் தலைமுறையினரை அறிவுபூர்வமான, ஆரோக்கியமான தலைமுறையாக நீங்கள் உருவாக்கவேண்டும். உங்களுக்கு தலைமை பண்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்பாக வழங்கப்படும். தமிழக அரசு திருமங்கலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது. தற்போது இந்திய வரலாற்றில் ஒரே அரசாணையில் 2 ஆயிரம் மினிகிளினிக்கை உருவாக்கி அரசு சாதனை படைத்துள்ளது. தைத்திருநாளை அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியுள்ளது என பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ஜெ பேரவை செயலாளர் தமிழழகன், ஐடி அணி சிங்கராஜபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     

Related Stories: