நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டை தேக்கம்: உள்ளூர் லாரிகளுக்கு வாய்ப்பு வழங்காததே காரணம்: லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை

 

சென்னை: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்ய லாரி டெண்டர் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை டெண்டர் எடுத்த கிறிஸ்டி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மூன்று பெரிய ஒப்பந்ததாரர்களிடம் கான்ட்ராக்ட் கொடுக்கிறது. இவர்கள் பழைய ஒப்பந்ததாரர் 19 பேரை இணைத்துக்கொண்டு இந்த மூன்று பெரிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி ஏற்றுவதற்கு சப் கான்ட்ராக்ட் கொடுக்கின்றனர்.

உதாரணமாக விருத்தாசலம் – ரெட்ஹில்ஸ் (240 கி.மீ.) அரசு கொடுக்கும் வாடகை டன் ஒன்றுக்கு ரூ.1800 வழங்கப்படுகிறது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வாடகை வெறும் ரூ.700 மட்டுமே. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு லாரி ஒன்றிற்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை லாபம் கிடைக்கிறது. டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து உள்ளூர் லாரிகளுக்கும் ஒப்பந்தத்தில் இயக்க வாய்ப்பு வழங்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். உள்ளூர் லாரிகளுக்கு வாய்ப்பு வழங்கினால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டை தேக்கம் அடைவதற்கு வாய்ப்பே இல்லை.

லாரிகளில் ஏற்றப்படும் வெய்ட்டுக்கு தகுந்தாற்போல் வாடகை கொடுத்தால் அரசு நிர்ணயித்த தொகையில் லாரிகளை இயக்க உரிமையாளர்கள் தயாராக உள்ளோம். யாரோ 19 ஒப்பந்ததாரர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு நாட்டின் விவசாயமும், லாரி தொழிலும் அழியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்து லாரி உரிமையாளர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: