இளம்பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய 2 பேர் மீது வழக்கு

கடலூர், அக். 26: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் பிளேவுட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கும் அந்த கடையின் உரிமையாளரின் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று கடை உரிமையாளரின் நண்பரான எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவருடைய செல்போனை பிடுங்கி, நெட் சென்டரில் இருந்து செல்போனில் இருந்த இளம்பெண் மற்றும் கடை உரிமையாளரின் கணவர் ஒன்றாக இருந்த புகைப்படங்களை கடையின் பெண் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர், இளம்பெண்ணின் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: