மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; இலங்கை-பாக். போட்டியை வீழ்த்திய கன மழை

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 25வது போட்டியில் நேற்று, இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. போட்டி துவங்கும் முன் மழை குறுக்கிட்டதால், 34 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது.

நீண்ட நேரத்துக்கு பின் போட்டி துவங்கியது. பாக். துவக்க வீராங்கனைகளாக முனீபா அலி, ஒமைமா ஷொஹைல் களமிறங்கினர். 4.2 ஓவரில், பாக். 18 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் கனமழை பெய்தது. அதன் பின் நீண்ட நேரம் காத்திருந்தும் மழை விடாததால் போட்டி கைவிடப்பட்டு ஆளுக்கு ஒரு புள்ளி தரப்பட்டது.

இதையடுத்து, புள்ளிப் பட்டியலில், பாக். 3 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், இலங்கை 5 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டன.

Related Stories: