ஓமலூர், அக்.24: சேலம் விமான நிலையத்தில், மத்திய அரசின் பிராந்திய இணைப்பு சேவை திட்டமான, உதான் திட்டம் மூலம் விமான போக்குவரத்து நடக்கிறது. இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் பகுதிகளுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில், உதான் திட்ட 9ம் ஆண்டு திட்ட தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு விமான நிலைய இயக்குனர் மவுஷாத் தலைமை வகித்தார். விமான நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், பயணிகள் மற்றும் பலர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், 9ம் ஆண்டு நினைவாக, பயணிகள் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பயணிகள் பலர் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
