இந்து சமய மற்றும் அறநிலைய கொடைகள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் சேகர்பாபு நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சிந்தனை செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஈஸ்வரன்(கொமதேக) ஆகியோர் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசினார். அதைத் தொடர்ந்து அந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: