ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தோல்வியை தவிர்க்க தமிழ்நாடு போராட்டம்

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி, கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர், பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 50.4 ஓவரில், 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தமிழக அணி மூன்றாம் நாள் முடிவில் 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. ஜார்க்கண்ட் அணி 274 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஜெகநாதன், ஆண்ட்ரே சித்தார்த் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கும் நிலையில், போட்டியை டிரா செய்ய தமிழ்நாடு அணி போராடி வருகிறது.

Related Stories: