உடன்குடி அருகே திமுக கிராம சபை கூட்டம் மக்களின் ஆதரவை அதிமுக இழந்து விட்டது அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

உடன்குடி, டிச. 28:  தமிழக மக்களின் ஆதரவை அதிமுக முழுமையாக இழந்துவிட்டது என  திமுக மக்கள் சபை கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார்.  உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவன்குறிச்சி பஞ்சாயத்து தாண்டவன்காடு கிராமத்தில் திமுக மக்கள் சபை கூட்டம் நடந்தது.  ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை வகித்தார். மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, ஆனந்த், மாணவரணி துணை அமைப்பாளர் அலாவுதீன், விவசாய அணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது,

 அதிமுக அரசு அனைத்து தரப்பு மக்களின்ஆதரவையும் முழுமையாக இழந்துவிட்டது.  வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி வாகை சூடும் என மத்திய, மாநில உளவுத்துறை கண்காணித்துள்ளது. இதனால் திமுக வெற்றியை தடுக்கவே புதுசு புதிதாக கட்சிகளை உருவாக்க முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் எத்தனை புதுக்கட்சிகள் வந்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. மக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர்பேசினார். தொடந்து கிராமங்களுக்குள் சென்று வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் சேக்முகமது, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ்,  நகர அமைப்பாளர் அஜய், ஆதிமூலம், தன்ராஜ். சிவப்பிரகாஷ் பங்கேற்றனர்.

Related Stories: