மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இலங்கை – நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

கொழும்பு: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்புவில் நடந்த போட்டியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி நிதானமாகவும், தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாடியது. கேப்டன் சமரி அத்தப்பட்டு 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் நிலாக்‌ஷி டி சில்வா அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 258 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சோபி டெவி்ன் 3 விக்கெட், ப்ரீ லிங் 2, ரோஸ்மேரி 1 விக்கெட் வீழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பிறகு மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Related Stories: