மது பதுக்கி விற்ற இருவர் கைது

கெங்கவல்லி, அக்.14: கெங்கவல்லி பகுதியில் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, கூடமலை ஊராட்சி மேல வீதி பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சக்திவேல்(47), 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சீனு மகன் ஜீவா(37) ஆகியோர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

Related Stories: