கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

 

கோவில்பட்டி, அக். 13: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மெழுகுபட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் கெவின் குமார் (12). இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைக்குடி தெற்கு தெருவில் உள்ள தனது தாத்தா அர்ஜுனன் (69) என்பவரது வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறையையொட்டி அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச்சென்றார். அப்போது கெவின் குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: