சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா விளக்கேற்றி வழிபாடு

சீர்காழி, டிச.28: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சனி பெயர்ச்சி பிரதோஷத்தை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி துர்க்கை அம்மன் சன்னதிகளில் அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மருதூர் மஞ்சக்கண்ணியில் உள்ள சோமநாதர் ஆலயத்தில் தனி சன்னதியில் உள்ள சனிபகவானுக்கு சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு நல்லெண்ணெய், இளநீர், சந்தனம், மஞ்சள், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகவேள்வி நடைபெற்றது. அதிகாலை நான்கு மணிக்கு சுவாமி தரிசனமும், தொடர்ந்து மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் பெயர்ந்த நேரத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: