டிச.13-15 தேதிகளில் ஐபிஎல் மினி ஏலம்; கம்மின்ஸ் வருவாரா…இடம் பெறுவாரா?

 

புதுடெல்லி: அடுத்த ஆண்டில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் 13-15 தேதிகளில் நடபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ள அணிகள், தங்களிடம் உள்ள வீரர்களில் யாரை தம் வசம் வைத்துக் கொள்ள விரும்புகின்றனவோ அதுபற்றிய பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தை நடத்துவதற்கான இடம், அட்டவணையை இறுதி செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிட்னி: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், வரும் நவ. 21ம் தேதி துவங்கவுள்ளது.

ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியின்போது கீழ் முதுகில் காயமடைந்தார். அதன் பின் வேறு எந்த போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. இந்நிலையில், கம்மின்ஸ் உடல் தகுதி பெற்று ஆஷஸ் தொடரில் அவரை ஆட வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸி அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆஸி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறுகையில், ‘பேட் கம்மின்ஸ், ஆஷஸ் தொடரில் ஆடுவார் என முழுமையாக நம்புகிறோம்’ என்றார்.

 

Related Stories: