100 பேர் கைது திருவிசநல்லூர் ப்ரத்தியங்கிராதேவி கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா

தஞ்சை,டிச.27: திருவிசநல்லூர்  சிவகாமசுந்தரி உடனுறை  சிதம்பரேஸ்வர சுவாமி,  பஞ்சமுக மஹாமங்கல ப்ரத்தியங்கிராதேவி கோயிலில் இன்று (27ம் தேதி) ஞாயிறு அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மங்கல வாத்தியம், மகரகணபதி வழிபாடு, சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம சங்கல்பம், சனிபகவான் திலஹோமம், அபிஷேகம், அலங்காரம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சனிபகவான் அருள் பெற வேணுமாய் கோயில் அர்ச்சகர் கணேஷ்குமார் குருக்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: