மருதடி அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகம் விநியோகம்

பாடாலூர், அக். 8: ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 2ம் பருவ பாட புத்தகங்கள் விநியோக்கிப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வரை பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தகங்கள், பாடத்திற்கான குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் ஆகியவை வழங்கப்பட்டது. ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் அல்லி தலைமையில் இலவச பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், பயிற்சி ஏடுகள் உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், இலக்குவன், ஜீவிதா, சரளா, அமுதாஉள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Related Stories: