செட்டிநாட்டில் ஏர்போர்ட் பணியை விரைவுபடுத்த வேண்டும்: பாஜ தமிழ் வளர்ச்சி பிரிவு கடிதம்

காரைக்குடி, டிச.25:  காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் 1907 ஏக்கரில் கால்நடை பண்ணை  உள்ளது. இங்கு இரண்டாம் உலகப்போரின் போது விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இது தற்போது வரை சேதமடையாமல் பாதுகாப்பாக உள்ளது. இங்கு உதான் திட்டத்தின் கீழ் ஏர்போர்ட் அமைக்க மதுரை ஏர்போர்ட் அதிகாரிகள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பாஜ தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் பிரிவு மாவட்ட தலைவர் சபரி டிராவல்ஸ் கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘செட்டிநாடு பகுதிக்கு அதிக அளவில் வெளிநாட்டினர் வந்துசெல்கின்றனர்.

இப்பகுதி மக்கள் அதிகஅளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளை பயன்படுத்துகின்றனர். எனவே பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் ஸ்தபதி செல்வராஜ், தமிழ்வளர்ச்சி, வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு மாநில தலைவர் ஆதித்யா ஆகியோரின் ஆலோசனைப்படி திருச்சி ஏர்போர்ட் இயக்குநரை நேரில் சந்தித்து ஏர்போர்ட் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையம் அமையும் பட்சத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.

Related Stories: