முத்துப்பேட்டை தர்ஹா பெரியகந்தூரி விழாவில் இன்று புனித சந்தனகூடு ஊர்வலம்

திருத்துறைப்பூண்டி, டிச.24: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை - ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 719 வது ஆண்டு பெரிய ஹந்தூரிவிழா கடந்த 15ம் தேதி புனித கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இன்று (24ம்தேதி) நள்ளிரவு 2.30 மணிக்கு புனிதசந்தனகூடு தர்ஹா வலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலாஷரிபுக்கு புனித சந்தனம் பூசப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாகி முதன்மை டிரஸ்டி பாக்கர் அலி மற்றும் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். பாதுக்காப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையில்250க்கும் மேற்பட்ட போலீஸ்சார் ஈடுப்பட்டு உள்ளனர். வரும் 28ம் தேதி இரவு புனிதகொடி இறக்கப்படுகிறது.

Related Stories: