பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர், செப்.25: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் மிருணாளினி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 26ம் தேதி காலை 10.30 மணி அயளவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: