சாத்தான்குளம், டிச. 23:சாத்தான்குளம் அருகே அதிசயபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை அமைத்து தரகோரி மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜிடம் பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பள்ளியில் நடந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார். கிராம கமிட்டித் தலைவர் உதயமணி, தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, பிச்சிவிளை சுதாகர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பிரின்ஸஸ் சுமதி ஏஞ்சலா வரவேற்றார். பள்ளி தாளாளர் இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆரம்ப ஜெபம் நடத்தினார். மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ரூ.1லட்சத்தை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரம், சிறப்பூரில் பனையில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளிக்கு ரூ.5ஆயிரம் வழங்கி, மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.