குளத்தூர் அருகே வேம்பார் தோமையார் ஆலய திருவிழாவில் தேர்பவனி

குளத்தூர், டிச.23: குளத்தூர் அருகே வேம்பார் தோமையார் ஆலய திருவிழாவில் தேர்பவனி நடந்தது. குளத்தூர் அருகே உள்ள வேம்பாரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தோமையார் ஆலயத்திருவிழா கடந்த 13ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருவிழாவின் பத்து நாட்களும் தினமும் காலை மாலை நேரங்களில் திருவிழா சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது. திருவிழா பத்தாம் நாள் தேரடி திருப்பலியை தொடர்ந்து வேளாங்கன்னி திருத்தல அதிபர் பிரபாகரன் தலைமையில் அன்னையின் தேர்பவனி முக்கிய வீதி வழியாக நடந்தது. நேற்று திருவிழா நிறைவாக கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வேம்பார் தூயஆவி ஆலய பங்குதந்தை ராஜாரொட்ரிகோ, கிராமத்தலைவர் அந்தோணி ஜான், செயலாளர் அந்தோணி சந்தோஷமணி, பொருளாளர் சேவியர் ஞானசேகரன், உறுப்பினர்கள் மகிமைராஜ், அந்தோணிமுத்து, தேவஞானம் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: