அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜாம்நகரைச் சேர்ந்த நிறுவனத்தால் இயக்கப்படும் ஹரிதாசன் என்ற கப்பலில் 950 டன் அரிசி மற்றும் 100 டன் சர்க்கரை ஏற்றப்பட்டிருந்தது. போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் பற்றிய தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், கப்பலில் அரிசி, சர்க்கரை மற்றும் டீசல் நிரப்பப்பட்டதால், தீ பரவியது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்து எழும் புகையால் அப்பகுதி கருமேகம் சூழ்ந்தது போல காணப்படுகிறது. இதனை காண உள்ளூர்வாசிகள் அருகிலுள்ள கடற்கரையில் கூடியுள்ளனர்.
