ஆலத்தூர் தாலுகா தெரணியில் இன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடவு

 

பாடாலூர், செப். 22: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி இன்று காலை 9.15 மணியளவில் ஆலத்தூர் தாலுகா தெரணியில் நடைபெறும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனை மரக்காடு திட்ட நிகழ்ச்சி கலந்து கொள்கிறார். அப்போது அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து காலை 10.00 மணியளவில் ஆலத்தூர் ஐடிஐயில் நடைபெற உள்ள தொழிலாளர் நலத்துறையின் சார்பிலான நலவாரிய உறுப்பினர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைக்கிறார்.

Related Stories: