காங்கயம், செப்.22: காங்கயம் கரூர் சாலையில் அமைந்துள்ள கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர். மருத்துவமனையில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களில் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள், மருத்துவமனை செல்ல முடியாதோர்களுக்கும் பயனடையும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் காப்பீட்டு அட்டைகளை வழங்கினர்.
