அமெரிக்காவுக்கு புதிய அச்சுறுத்தல் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: டிரம்ப் திடீா் குற்றச்சாட்டு

நியூயார்க்: அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்துவதை தடுக்க ஒரு தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் போதைப்பொருளை தடுக்க அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நாடுகளை பட்டியலிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதில் ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்ஸிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய 23 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து இந்தியா உள்பட 23 நாடுகளை சட்டவிரோத மருந்துகள் மற்றும் முன்னோடி ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம், இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட இந்த 23 நாடுகளும் பெரிய போதைப்பொருள் போக்குவரத்து அல்லது பெரிய சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்திநாடுகளாக அடையாளம் கண்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் வந்தால் இந்த 23 நாடுகள் தான் பொறுப்பு என அமெரிக்கா கூறியுள்ளது.

Related Stories: