அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் தொழிலாளி மல்லப்பா(50) நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். ஆக.27ல் தெரு நாய்களை மல்லப்பா விரட்டியபோது, அவரது முகத்தில் நாய் கடித்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்றார் மல்லப்பா. நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இப்படி தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் தொழிலாளி மல்லப்பா(50) நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆக.27ம் தேதி தெரு நாய்களை மல்லப்பா விரட்டியபோது, அவரது முகத்தில் நாய் கடித்துள்ளது. இதையடுத்து மல்லப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்றார்.

பின்னர் நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் நாய் கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 3 லட்சத்து 67 ஆயிரத்து 604 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் நாய்கடியால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடியால் 4,41,804 பேர் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு நாய் கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் சேலத்தில் அதிகபட்சமாகவும் நீலகிரியில் குறைந்தபட்சமாகவும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சேலத்தில் 25 ஆயிரத்து 182 பேரும், திருச்சியில் 15,664 பேரும், கோவையில் 11,282 பேரும், மதுரையில் 8,716 பேரும், தலைநகர் சென்னையில் 8,552 பேரும், நெல்லையில் 8039 பேரும், பெரம்பலூரில் 2981 பேரும், நீலகிரியில் 1321 பேரும் இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: