சென்னை: தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவருக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன்: எடப்பாடி பழனிசாமி
- உள்துறை மந்திரி
- Amitsha
- பசும்போன் முத்துரமலிங்கத் தேவர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- பொது செயலாளர்
- இயக்குநர்கள் குழு
