16வது ஆண்டில் தடம்பதிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்: அமைச்சர் பெருமிதம்

 

சென்னை: சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாளான செப்டம்பர் 15ம் தேதியை நினைவுகூர்ந்தும், 16வது ஆண்டில் தடம் பதிப்பதை சுட்டிக்காட்டியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,‘‘முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில் சென்ைன கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு 2010ம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞர் நூலகத்தை கட்டுவதற்கான ஆணை பிறப்பித்தார். இது ஒரு அதிநவீன பொது நூலகமாக கட்டப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் 102வது பிறந்தநாளில் இதற்கு பெயர் வைக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு தினமும் சராசரியாக 2700 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதியை நினைவுகூர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவு: கலைஞரால், அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாள் இன்று. 56 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள், 70 லட்சத்து 38 ஆயிரம் பார்வையாளர்கள் என்று தலை நிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் வாசகர்கள், எழுத்தாளர்கள், மாணவர்களின் அறிவுச் சரணாலயமாக திகழ்வதில் பெருமை அடைகிறோம். கலைஞர் வழியில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் நூலகங்களை அமைத்து வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை, லட்சியம்.

 

Related Stories: