அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து செல்கிறது

அரவக்குறிச்சி, டிச.21: நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அமராவதி அணையிலிந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையைக்கடந்து கருர் நோக்கிச் செல்லுகின்றது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றது.

இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம் சின்னதாராபுரம், ராஜபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்பொழுது நெல் , வாழை, மஞ்சள், போன்ற பணப் பயிர்கள் பயிரிட்டுகின்றனர். இந்நிலையில் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அமராவதி அணையிலிருந்து 1600 கன அடி மேல் தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையைக் கடந்து கருர் நோக்கிச் செல்கின்றது.இதன் காரணமாக வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் . இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: