அமைச்சர் நேரு குறித்து அவதூறு

 

திருச்செங்கோடு, செப்.15: சமூக வலைதளங்களில் அமைச்சர் நேரு குறித்து அவதூறாக பேசி வரும் தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு குறித்து அவதூறாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசி வருவதாக தவெக நிர்வாகி நவீன் மீது திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தரக்குறைவாக பேசி வருகிறார். அமைச்சரை ஒருமையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பதிவிட்டு வரும் நவீன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர போலீசாரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

Related Stories: