ரூ.3.87 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, செப்.13: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு, விற்பனை சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து 45 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.200.75 முதல் ரூ.228.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.145.10 முதல் ரூ.170.25 வரையிலும் ஏலம்போனது. ஆக மொத்தம் ரூ.3.87 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories: